சிறிரெலோவினால் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட குகராஜாவின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) வவுனியா மாவட்ட பொருப்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான கிறிஷ்டி குகராஜா(குகன்) அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் நிறைவை முன்னிட்டு

சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின்(SRI TELO) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் ஆலோசனைக்கமைவாக சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞரணியினரால் நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது

இந்நிகழ்வு பற்றி அறியவருவதாவது……,

கொட்டும் மழையின் மத்தியிலும் சிறீரெலொ இளைஞரணியினரால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று(15.05.2018) மாலை 5மணியளவில் வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள குகன் அவர்களின் திருவுருவ படத்திற்கு முன்னால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் அந்தோணி மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜூட்,சாந்தமேரி,சந்துரு ஆகியோருடன் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான அதிஷ்ட செல்வம்,விஜயகுமார் ,ஆகியோருடன் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,செயலாளர் ஜெகன் அவர்களுடன் மறைந்த குகன் அவர்களின் சகோதரர் ஜெயனந்தி ,அவருடை தாயார் ,சகோதரி உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னால் போராளிகளான அஜித்,வின்சன்ட், அன்டன்(மாமா) , அல்பிரட், பிரேம், சிறிரெலோ இளைஞரணி தலைவர் , செயலாளர் ,உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மறைந்த குகன் அவர்கட்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்