சங்கானையில் திருட்டு முயற்சி முகநூல் செயலியூடாக முறியடிப்பு

சங்­கானை, அராலி வீதி மற்­றும் குளத்­தடி வீதி­யில் கடந்த சில நாள்­க­ளாக திரு­டர்­க­ளின் நட­மாட்­டம் அதி­க­மாக காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று முன்­தி­னம் இரவு அந்­தப் பகு­தி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திருட்டு முயற்­சியை, முக­நூல் செயலி ஊடாக இணைந்த இளை­ஞர்­கள் முறி­ய­டித்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
இந்­தப் பகு­தி­யில் உள்ள வீடு­க­ளின் யன்­னல் கண்­ணா­டி­கள் கல்­லால் எறிந்து உடைக்­கப்­பட்­டுள்­ளன. மாவடி வைர­வர் ஆல­யத்­தின் அரு­கில் உள்ள வளர்ப்பு நாயும் மர்­ம­மான முறை­யில் உயி­ரி­ழந்­துள்­ளது. அராலி வீதி­யில் உள்ள அலு­மி­னிய பொருத்­துக்­கள் செய்­யும் கடை­யின் கத­வு­கள் உடைக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­டர்­க­ளின் நட­மாட்­டம் ஏற்­க­னவே காணப்­ப­டும் நிலை­யில், இந்­தச் சம்­ப­வங்­க­ளும் திரு­டர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­லாம் என்று மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் இரவு திரு­டர்­கள் ஊருக்­குள் உல­வு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகுதி இளை­ஞர்­கள் முக­நூ­லில் காணப்­ப­டும் குழு அரட்­டை­யில் (குறூப் சட்) தக­வல் வழங்கி இளை­ஞர்­களை ஒருங்­கி­ணைத்து, திருட்டு முயற்­சியை முறி­ய­டித்­துள்­ள­னர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்