9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசின் சமூகப்பணி

9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளினை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு மற்றும் சமூகநல அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியா முழுவதும் சமூக சேவைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பிரித்தானிய பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றினால் The Great Plastic Pick Up என்ற எண்ணக்கருவில் நடைபெற்ற பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியினை பல இடங்களில் மே 11,12 மற்றும் 13ம் நாட்களில் மேற்கொண்டுள்ளனர்.

இதனை விட உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் லண்டனில் அமைந்திருக்கின்ற பல குருதிக்கொடை நிலையங்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களும் இணைந்து இரத்ததானம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் .

அத்தோடு இலங்கையில் தமிழ் மக்கள் மீதான நடந்தேறிய இனப்படுகொலைக்கு இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பவும் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை காலதாமதமில்லாமல் நிறைவேற்றவும் பரிகார நீதி வேண்டியும் இங்குள்ள மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துவிச்சக்கரவண்டி பயணத்தையும் ஆரம்பித்திருக்கின்றது.

இந்த செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றி முழுமையடைய செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்