பூனைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குச் சீவமோசம்

தீவு­க­ளில் பெரி­யது வேலணை. சனத்­தொ­கை­யி­லும் அதுவே முதன்மை இடம் வகிக்­கி­றது. இத­னால், இந்த வழி­யாக யாழ்ப்­பா­ணத்தை நோக்­கிச் செல்­கின்ற பய­ணி­கள் பேருந்­து­க­ளின் முதன்மை இலக்­காக இந்­தப் பகு­திப் பய­ணி­களே விளங்­கு­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் பய­ணி­களே பேருந்­து­க­ளுக்­கி­டை­யி­லான போட்டி ஓட்­டங்­கள் ஒன்­றும் வியப்­புக்­கு­ரி­யவை அல்ல. இத்­த­கைய போட்டி ஓட்­டங்­கள் விபத்­துக்­க­ளுக்கு வழி­வ­குப்­பது மாத்­தி­ர­மல்­லாது பய­ணி­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இதற்கு மேலாக, பய­ணி­கள் எவ­ரை­யும் ஏற்­றா­மல்­கூ­டப் போட்­டிக்கு ஓடி முடிக்­கின்ற கோமா­ளித்தனத்­துக்­கும் குறை­வில்லை. வேல­ணைப் பகு­தி­யில் நிக­ழும் பய­ணி­கள் பேருந்­து­க­ளின் போட்டி ஓட்­டம் சற்று வித்­தி­யா­ச­மா­னது. கிட்­டத்­தட்ட நான்கு தரப்­பி­னர் ஒரே வேளை­யில் போட்டி போட்டு ஓடும் கள­மாக இருக்­கி­றது வேலணை.

குறி­காட்­டு­வான் மற்­றும் ஊர்­கா­வற்­றுறை ஆகிய வழித்­த­டங்­க­ளுக்­கு­ரிய இரண்டு பேருந்­துச் சேவை­க­ளும் ஒன்­றா­கச் சந்­திக்­கும் களம் இது. வேல­ணைத் துறை­யூர்ச் சந்­தி­யில் ஆரம்­பிக்­கும் ஓட்­டப்­பந்­த­யம், வங்­க­ளா­வ­டிச் சந்தி வரை­யில் கடும் போட்­டி­யாக இடம்­பெற்று, பின்­னர் அந்த வழித்­த­டத்­தின் இறு­தித் தரிப்­பான அல்­லைப்­பிட்டி வரை­யில் நீடிக்­கின்­றது. ஊர்­கா­வற்­றுறை வழித்­த­டத்­துக்­கு­ரிய தனி­யார் பேருந்­து­கள் வேல­ணைச் சந்­தியை வந்­த­டைந்­த­தும், அங்கு தரித்து நின்று பரந்த வெட்­டை­யா­கத் தெரி­கிற புங்­கு­டு­தீ­வுக் கடல் வீதி­யூ­டா­கத் தொலை­வில் குறி­காட்­டு­வான் வழிப் பேருந்­து­கள் ஏதா­வது வரு­கின்­ற­னவா? என்று கவ­னித்­த­படி அவ்­வி­டத்­தில் உறங்கு நிலை­யில் தரித்­துக் கிடக்­கின்­றன.

தொலை­வில் குறி­காட்­டு­ வான் வழித்­த­டப் பேருந்­து­கள் எவை­யா­வது வரு­வதை அவ­தா­னித்­தால், வாலை முறுக்­கி­விட்ட நாம்­பன் மாட்­டைப்­போல திடு­திப்­பாக இரைச்­ச­லு­ட­னும் ஒலி எழுப்­பிக்­கொண்டு ஓட்­டம் பிடிக்­கின்­றன. பந்­த­யம் சூடு­பி­டிக்­கி­றது. பின்­னால் வரும் பேருந்­துச் சார­தி­யும் விட்­டேனா பார் என் று துரத்­திச் செல்ல மக்­கள் அடர்த்தி குறை­கிற வங்­க­ளா­வ­டி­யில்­போய்ச் சற்­றுத் தணி­கி­றது போட்டி.

இதில் கிட்­டத்­தட்ட இரண்­ட­ரைக் கிலோ­மீற்­றர்­கள் நீள­மான அந்­தக் கர­டு­மு­ர­டான, நௌிவு சுழி­வான வீதி­யைக் கொண்ட பிர­தே­சத்­துக்­குள்­தான் கடும் ஓட்­டப் போட்டி நிகழ்­கி­றது. அத்­து­டன் இரண்டு பேருந்­து­கள் மாத்­தி­ரம் போட்­டிக்கு ஓடு­வ­தில்லை. ஊர்­கா­வற்­றுறை வழித்­த­டத்­துக்­கு­ரிய தனி­யார் மற்­றும் அரச, குறி­காட்­டு­வான் வழித்­த­டத்­துக்­கு­ரிய தனி­யார் மற்­றும் அரச பேருந்­து­கள் எனச் சில­வே­ளை­க­ளில் நான்கு பேருந்­து­க­ளின் ஓட்­டப்­பந்­த­யக் கள­மா­க­வும் மாறி­வி­டு­கி­றது குறித்த பகுதி. இத்­த­னைக்­கும் வேல­ணைச் சந்­தி­யில் நேரக் கண்­கா­ணிப்­பா­ளர் ஒரு­வ­ரும் சிவனே என்று தவம் இருக்­கி­றார்.

இவர்­க­ளின் இத்­த­கைய போட்டி ஓட்­டத்­தால் வேல­ணைப் பகு­தி­மக்­கள் பெரும் சிர­மத்தை எதிர்­கொள்­கின்­ற­னர். ஏதா­வது பார­தூ­ர­மான சம்­ப­வங்­கள் நிகழ்­வ­தற்கு முன்­பா­கக் குறித்த விட­யம் சார்ந்து முடி­வெ­டுக்­கக்­கூ­டிய அதி­கா­ர­மு­டை­ய­வர்­கள், உட­ன­டி­யாக இந்த விட­யத்­தில் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.போட்­டிக்கு ஓடு­கிற இத்­த­கைய பேருந்­து­க­ளில் பய­ணிப்­பதை பய­ணி­கள் தவிர்த்­தல் இவர்­க­ளின் இத்­த­கைய பந்­த­யங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க இய­லும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்