கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினரின் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று(16)திருகோணமலை மாகாண வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

வீட்டு திட்டங்கள் அடங்கிய உதவிகள் மக்களுக்கு வழங்குதல்,உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட கடத்த கால மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை மதிப்பீடு செய்து உரியவர்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறுபட்ட தீர்மானங்களும் இதன் போது மேற்கொள்ளப்பட்டன இக் கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் சபை தலைவரும் மாகாண உள்ளூராட்சி முதலமைச்சர் அலுவலகத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.எஸ்.எம்.பாயிஸ் ,பணிப்பாளர் சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகச் செயலாளருமான ஹஸன் அலால்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்