குச்சவெளியில் பெண்ணொருவரை தாக்கி காயப்படுத்திய ஒருவர் கைது.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை தாக்கி காயப்படுத்திய ஒருவரை நேற்று(16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                          குறித்த சந்தேக நபர் காணிச்சண்டையின் போது பெண்ணொருவரை தாக்கியதாக சந்தேக நபருக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                              சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு,திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                           பாதிக்கப்பட்ட பெண் குச்சவெளி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்