அட்டன் சில்லறை வர்த்தக நிலையம் இனம் தெரியாதவரால் உடைப்பு

அட்டன் கே.சுந்தரலிங்கம்

17.05.2018

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில்பிரதான வீதியில் மணி கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்று இன்று 2018.05.17 அதிகாலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடை இன்று அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் உடைத்திருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த கடையில் உள்ள கடையில் மூன்று பூட்டுகளும் உடைக்கப்பட்ட போதிலும் பூட்டிடும் தாழ்பால் இறுகியதில் திருடருக்கும் கடையில் உள்ள நுழைய முடியாமல் போய் உள்ளது.

இதனால் கடையில் எந்த ஒரு பொருளும் திருடர்களால் கொண்டு செல்ல முடியாது போய் உள்ளது.

குறித்த கடை மிகவும் சனநடமாற்ற பகுதியில் அமைந்துள்ளதால் ஏனைய கடைகளின் பாது காப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக ஒரு சில கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன்பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்