எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என அறிவீர்களா?

நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என சிலர் சொல்வார்கள். சிலர் வாழைப்பழம் உடல் எடையை குறைக்கும் என்பார்கள். எதுதான் சரி என நாமும் குழம்பியிருக்கோம்.

உண்மையில் எல்லாவகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வாழைப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
இன்னும் சில வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். இப்படி எதிர்மறையான பண்பை பெற்றுள்ளன. உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க எந்த மாதிரியான வாழைப்பழத்தை சாப்பிடலாம் என பார்க்கலாம்.


வாழைப்பழ சத்துக்கள் :

ஒரு வாழைப்பழ்த்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. இதில் அதிகளவு பொட்டாசியம். எல்லா விட்டமின் மற்றும் மற்ற தாதுப் பொருட்கள் உள்ளன.
உடல் எடையை குறையச் செய்யும் வாழைப்பழம் :

செவ்வாழை, பூவம் பழம், மற்றும் கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய பழங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யும். ஏனென்றால் இவற்றில் அதிக அளவு பி6 மற்றும் நார்சத்து இருப்பதால் இவைகள் உடலில் கொழுப்புகளை குறைக்கும்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பழங்கள் :

மலை வாழைப்பழம் , நேந்திரம் பழம் ஆகியவற்றில் அதிக கலோரி இருக்கிறது. இவை 10 % அதிக பொட்டாசியம் சத்தை உள்ளடக்கியது.

அவற்றிலுள்ள அதிகப்படியான குளுகோஸ் கிளைகோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கும்போது தசைகளுக்கு வலிமை தரும். உடல் எடை கூடும். இதனை மில்க் ஷேக் மற்றும் சேலட்டாக சாப்பிடும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?

வாழைப்பழத்தில் சுவையான ஸ்மூதி செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அதுபோலவே ம்ற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடும்போது உடலில் அதிக சக்தி உண்டாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்