பயணிகள் மூன்று மணித்தியாலத்தின் முன்னரே விமானநிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு ஸ்ரீலங்கா விமானசேவை அறிவிப்பு

விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இன்றையதினம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் 3 மணித்தியாலத்திற்கு முன்னதாக விமானநிலையத்திற்கு வருகைதருமாறு ஸ்ரீலங்கா விமானசேவை தெரிவித்துள்ளது. இது இன்றையதினம் நண்பகல் 12 மணிமுதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அடுத்த அறிவிப்பு வரையில் இந்த நிலை தொடரும் என்று ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் சட்டப்படி பணியில் ஈடுபட்டிருப்பதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா விமான சேவைகள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்