நமீதாவை அணுகிய டி.ஆர்! 11 வருடங்களுக்கு பிறகு..

டி.ராஜேந்தர் நீண்ட காலமாக படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்தார். சென்ற வருடம் அவர் கவண் படத்தில் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது.

தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சினிமா விழாக்களில் அவர் பேசும் பேச்சு பலரையும் ஈர்க்கும்.

இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்க முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. 11 வருடங்களுக்கு முன் வீராசாமி படத்தை இயக்கிய அவர் அதன்பிறகு தற்போது தான் படம் இயக்குகிறார்.

டி.ஆர் தயாரித்து இயக்கும் இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நமிதாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்