கொட்டகலை ஆறு பெருக்கெடுத்ததில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தன.

தொடர்சியாக பெய்து வரும் தொடர் மழையினை அடுத்து கொட்டகலை பகுதியில் ஆறு மேற்பட்ட வீடுகளுக்குள் இன்று பகல் முதல் வெள்ள நீர் புகுந்துள்ளதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த வீடுகளில் வாழ்ந்த குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கோட்டகலை பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மேலும் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை பல வீதிகளில் மண் சரிந்து வீதிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாடசாலை செல்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளன தொடர் மழை காரணமாக ஆறு ஓடைகள் பெருக்கெடுப்பதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து கல்வி அமைச்சரிடம் வினவிய போது மத்திய மாகாண கல்வி வலயங்களில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் நிலவும் பாடசாலைகளில் வலயக் கல்விப்பணிப்பாளருடன் பேசி தேவைக்கேற்ற வகையில் வீடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம் ரமேஸ்வரன் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்