தூத்துக்குடி சம்பவம்: லண்டனில் வெடித்தது போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இதனால் தமிழகம் முழுவதும் பதற்றநிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவத்தின் உரிமையாளரின் வீட்டின் முன் ஒன்று கூடிய மக்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்