லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்

தூத்துக்குடியில் சனநாயக முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீதான மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கண்டித்தும் செர்லயிட் ஆலையினை மூட கோரியும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு
புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இந்தியாவில் தமிழ்நாடு தூத்த்துக்குடி மாவட்டத்தில் செர்லயிட் ஆலையினை மூட வலியுத்தி 90 நாட்களுக்கு மேலாக அறவழியில் மக்களால் போராட்டம் நடைபெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 மேற்பட்ட மக்கள் பலியாகினர். அதை தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கொந்தளித்திருக்கின்ற நிலையிலேயே நேற்றைய தினம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முற்றுகையிடப்பட்டு தமிழர்களால் மாலை 4 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தி கவயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.செலுத்தப்பட்டதுடன் மாலை 6 மணிவரை கண்டன ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள்.

இதனைவிட எதிர்வரும் சனிக்கிழமையும் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்