தூத்துக்குடி தாக்குதலின் எதிரொலி! லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகனை கடுமையாக தாக்கிய தமிழர்கள்

தூத்துக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் போது அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக அமைதியான முறையில் நூறாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியைப் பல்லாயிரக்கணக்கானோர் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இன்றும் பொலிசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இளைஞர் ஒருவர் பலியானார். நேற்று மற்றும் இன்று சேர்த்து மொத்தம் 13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலின் எதிரொலியாக லண்டனில் அமைந்துள்ள அனில் அகர்வால் வீட்டு முன்பு திரண்ட தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கண்டனமுழுக்கங்கள் எழுப்பினர்.

கைகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளதாகவும், இதனால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்