லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர்! பிரித்தானிய பாராளுமன்றத்தில் வாதம்

அண்மையில் லண்டனில் தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிரித்தானியா பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் Hywel Williams கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட. பிரிக்கேடியர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சருடன், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கு அமைச்சர் எந்த முறையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டார் என கேள்வி எழுப்பப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்ததாகவும், அங்கு பிரிகேடியரின் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியதாக மாநில அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏபரல் மாதம் 15ஆம் திகதியுடன் பிரிகேடியருக்கு லண்டனில் இருந்த பதவிகள் நீக்கப்பட்டதாகவும், இதுவரை அவருக்கு எவ்வித நியமனங்களும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கைக்காக உயர்ஸ்தானிகர் அலுவலத்தில் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ பாதுகாப்பு தொடர்பான அதிகாரியாக செயற்பட்டார்.

இதன்போது தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் வாழ் தமிழர்களின் கழுத்தை அருத்து விடுவேன் என சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்தமையினால் பிரிகேடியருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்