கிளிநொச்சியில் அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு பயணிகள் பாதிப்பு

வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வைகயில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமைக்கும், மற்றும் வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர் பெரும் நெருக்கடிக்குள் மத்தியில் போதுமான சேவையினை மீள்குடியேற்றம் காலம் தொடக்கம் வழங்கி வருகின்றார்கள். வலைப்பாடு என்பது ஒரு குறிப்பிட்டளவு மக்களை கொண்ட கிராமம். இந்த கிராமத்திற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வவுனியாவிலிருந்து நேரடியாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியிருப்பது கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர்களை பெரிதும் பாதிக்கும் செயற்பாடாகும்.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன் உரிமைமாற்றம் செய்யப்பட்ட அனைத்து தற்காலி வழியனுமதிபத்திர உரிமையாளர்களையும் தற்போது உருவாக்கப்பட்ட வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஒரு இலட்சம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளமையினையும் கண்டித்து இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இருந்து இடம்பெறுகின்ற வெளியூர் மற்றும் உள்ளுர் தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் இச் செயற்ப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததொன்றே இதுதொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை தீர்க்கமான முடிவொன்றை எடுப்போம் என கூறிய வாக்குறுதிக்கு அமைவாக பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்