உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு…

(க.கிஷாந்தன்)

நோர்வூட் மேற்பிரிவு தோட்டபகுதியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த நிலையில் புற்காண் ஒன்றில் இருந்து மீட்கபட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 26.05.2018 அன்று மாலை இந்த சிறுத்தையின் உடலம் பொலிஸாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை இனங்கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட போது குறித்த சிறுத்தையின் தலைபகுதியில் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்யபட்டு சிறுத்தையின் பற்களையும், நகங்களையும் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாரினால் நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டு குறித்த சிறுத்தையின் உடலம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஒப்படைக்கபட்டுள்ளது.

சிறுத்தையின் உடலத்தை பொறுப்பேற்ற வனவிலங்கு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக உடவலவையில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சிறுத்தையினை தாக்கி கொலைசெய்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்