சம்மாந்துறை பொலிசாரின் அதிரடி: கேரளகஞ்சாவுடன் இருவர் கைது..

கடந்த 26ம் திகதி மாலை சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 18, 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் 1  1/2 kg கேரளகஞ்சா பெட்டி ஒன்றுடன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புல்மோட்டையில் இருந்து கல்முனைக்கு கொண்டுவந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இக் கேரளாகஞ்சா கல்முனை முதல் அக்கரைப்பற்று வரையுள்ள பிரதேசங்களுக்கு விற்பனை செய்யப்படவிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்தது.

இக் கேரளா கஞ்சாவின் மொத்த பெறுமதி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாகும்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று 27ம் திகதி சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டதோடு மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்