பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வந்து மோகன்-கணேஷ் ஞாபகார்த்த கிண்ணத்தை கைப்பற்றியது Hit அணி !

(தனுஜன் ஜெயராஜ் )

காரைதீவு றிமைண்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அமரர்களான மோகன்-கணேஷ் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து  கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவு கனகரெட்னம் விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து காரைதீவு Hit அணி மோதியருந்தது.ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய HIT அணியினர் 10ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்று கொண்டனர்.100 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய VSC அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவி கொண்டனர்.இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக Hit அணியின் சகலதுறை வீரர் கவி தெரிவு செய்யப்பட்டார்.மேலும் இத் தொடரின் சிறப்பு சிறப்பாட்டக்காரராக  விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கஜந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டிக்கு பிரதம அதிதியாக வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அவர்களும் கெளரவ அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைரெட்னம் மற்றும் நகர,பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

காரைதீவு Hit அணியானது பல வருடங்களின் பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் மீண்டெழுந்து வந்து இந்த தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளமை இங்கு சிறப்பம்சமாகும்.

படங்கள் – கஜன், லிரோஷ்

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்