பம்பரகந்த நீர்வீழ்ச்சியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்)

பம்பரகந்த நீர்வீழ்ச்சியில், 29.05.2018 அன்று மாலை விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம், 29.05.2018 அன்றைய தினமே மீட்கப்பட்டதாக, ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த இளைஞனே, திடீரென நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகளும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த இளைஞன், தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான சனோஜ் மிஹிரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விளைஞன், மோட்டார் சைக்கிளில் பம்பரகந்தை பகுதிக்கு வந்து, நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள மண் பாதையொன்றில் அதனை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் தன்​னுடைய அலைபேசி மற்றும் பேர்ஸ் என்பவற்றை வைத்துவிட்டு நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளாரென, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனது பெற்றோர் பிரிந்து மறுமணம் முடித்து வாழ்கின்ற நிலையில், உயிரிழந்த இளைஞர் தனது சசோதர உறவுமுறையான ஒருவருடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்