இரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் கைது

எப்.முபாரக் 2018-06-01

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை வியாழக்கிழமை (31) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், மீன்பிடி கிராமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் அப்பகுதியில் நீண்ட காலமாக கேரளா கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கேரளா கஞ்சா வைத்திருப்பதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்