வெள்ளவத்தையில் ஏற்பட்ட குளறுபடி! மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை

வெள்ளவத்தையில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வெள்ளவத்தை, ஹமாஸ் அவனியுவில் உள்ள வீடொன்றில் இருந்த வங்கி கடன் அட்டையை திருடி 661496 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவரது மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் 53 வயதானவர் எனவும், பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவரும் எனவும் இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இதேவேளை வெள்ளவத்தையின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாகவும், வேலைக்கு பணியாட்களை அமர்த்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்