‘பிசிசிஐ’க்கு அபராதம்

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரின்போது அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக பிசிசிஐ மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் காரணமாக அத்தொடர் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது. அந்தத் தொடரின்போது ரூ.243 கோடி பணப்பறிமாற்றத்தில் விதிமீறல் நடந்ததாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

இதனையடுத்து பிசிசிஐ மீது அமலாக்கத்துறை ரூ.121 கோடி அபராதம் விதித்தனர். பிசிசிஐக்கு ரூ.82,86 கோடியும், முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு ரூ.11.53 கோடியும், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலீத் மோடிக்கு ரூ.10.65 கோடியும், முன்னாள் ஐபிஎல் பொருளாளர் பாண்டோவுக்கு ரூ.9.72 கோடியும் என மொத்தம் ரூ.121.56 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தப்பணத்தை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்