ஜே.வி.பியின் 20இற்கு சாவுமணி அடிக்க மஹிந்த அணியினர் முடிவு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் ஜே.வி.பியின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் கூடினர்.
இதன்போது ஜே.வி.பியால் சபாநாயகரிடம் தனிநபர் பிரேரணையாகக் கையளிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதையடுத்தே அதை எதிர்க்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் எதிர்ப்புகளை மீறி சபைக்கு வரும் பட்சத்தில் அதற்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேர்தலை நடத்துவதற்குரிய தொடர் அழுத்தங்களை அரசுக்கு வழங்குவதற்கும், பிரதி சபாநாயகராக தமது அணி வேட்பாளரொருவரை நிறுத்துவதற்கும் பொது எதிரணியின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்