மருதமுனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் பலி!

(டினேஸ்)

கல்முனை தலைமைப் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 2.30 மணியளவில் பிரதான வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக கல்முனை போக்குவரத்து  பொலீஸ் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இவ்விபத்தில் மருதமுனை வீ.சீ. வீதியைச் சேர்ந்த ஆர்.அப்லிஸ் (21வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் இவ் விபத்து தொடர்பான பிர தகவல்கள் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்முனை பொலீஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்