வவுணதீவு பத்திரகாளியம்மன் திருச்சடங்கு இடம்பெறவுள்ளது

மட்டக்களப்பு நகரின் மண்முனை மேற்கின் முதன்மைக்கிராமம் வவுணதீவில்  அமைந்துள்ளதும்,
வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான,தாயாரை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்து அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கும் வவுணதீவு பத்திரகாளியம்மன் வருடாந்த திருச்சடங்கானது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(5.6.2018) இரவு திருக்கதவு திறக்கப்படவுள்ளது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை(8.6.2018)ஆலயத்தில் இடம்பெறும் தீமிதிப்பு வைபவத்துடன் வருடாந்த திருச்சடங்கு நிறைவு பெறவுள்ளது.

இவ்வருடாந்த திருச்சடங்கில்  தினமும் பூசைகள்,கும்பச்சடங்குகள்,ஊர்காவல் பண்ணுதல்,அடியார்களின் நேர்த்திக்கடன்,அன்னதான நிகழ்வுகள்,கலைநிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பிரதம பூசகர் பொன்.சுரேந்திரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்