துணுக்காய் வலய ஆசிரியர்களுக்குச் செயலமர்வு!

துணுக்காய் வலயத்துக்குட்பட்ட சுற்றாடல் சார்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வை இரானுவ அதிகாரி ஒருவரே வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமானது. செயலமர்வின் முதற்கட்டமாக உடற்பயிற்சி சார்ந்த விரிவுரைகள் நடைபெற்றன. உடற்பயிற்சி சார்ந்த பயிற்சிகளை இரானுவ அதிகாரி ஒருவரே வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மட்டத்தில் சுற்றாடல் தொடர்பாக பேணப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன.
இராணுவ அதிகாரி கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று வடக்கு மாகாண சபையினரும் வலியுறுத்தி வரும் நிலையில், இராணும் நடத்தும் முன்பள்ளிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் குறித்த பயிற்சிகளை மைய சுற்றாடல் அதிகார சபையினர் இராணுவ அதிகாரி மூலமாக நடத்தியுள்ளனர்.
“இதனை நடத்துவது மத்திய சுற்றாடல் அதிகார சபையே. வளவாளரையும் அவர்களே ஏற்பாடு செய்வர். அதற்கான அனுமதி மாத்திரமே நான் வழங்குவேன். இராணுவ அதிகாரியை வளவாளராக நியமித்தமை தொடர்பில் அவர்களிடம் கேட்டுத்தான் அறிந்துகொள்ள வேண்டும்” என்று துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்