ஐ.தே.கயின் மத்திய குழுவுக்கு புதிதாக ஒன்பது பேர் நியமனம்!

ஐ.தே.கயின் மத்திய குழுவுக்கு புதிதாக ஒன்பது பேர் நியமனம்! – அனைத்துப் பதவிகளுக்கும் உச்சபட்ச அதிகாரத்தை வழங்கவும் ரணில் உறுதி
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு 9 புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று கூடிய ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவின் ஒப்புதலின் பிரகாரமே இவ்வாறு 9 புதிய உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் அரசியல் சபையினூடாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி மாத்தறை மாவட்டத்திலிருந்து புத்திக்க பத்திரனவும், கண்டி மாவட்டத்திலிருந்து லக்கி ஜயவர்தனவும், கேகாலை மாவட்டத்திலிருந்து துசித்த ஜெயமன்னவும் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சிடினி ஜயவர்தன, ஏ.ஏ. விஜேதுங்க, தினேஷ் கன்கந்த, அஜித் மானப்பெரும ஆகியோர் மாவட்ட அடிப்படையிலும், ஜே.சி.அலவத்துகல அரசியல் சபையினூடாகவும்  உள்வாங்கப்பட்டுள்ள்ளனர்.
இதேவேளை, கட்சியின் உப பொருளாளர் உட்பட சில முக்கிய பதவிகளுக்கான நபர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உருவாக்கப்பட்டுள்ள அனைத்துப் பதவிகளுக்கும் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்படும் எனவும்  பிரதமர் ரணில் உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்