வவுனியாவில் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்து

ஏ9 வீதி வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில்  வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சமநிலை தடுமாறி வீதியின் குறுக்கே துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது சிறுவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக இராணுவ ஜீப் வண்டியை செலுத்திய போது அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (04.06) மாலை 6 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இதில் சிறுவர்கள் இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு இராணுவத்தினர் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரிய குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்