சகோதரன் என நம்பியவனால் 14 வயதில் அம்மாவானேன்: ஒரு சிறுமியின் கண்ணீர் கதை

14 வயதில் அம்மாவான ஒரு சிறுமியின் கண்ணீர் கதையை இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கிறது .

நான் படித்துக்கொண்டிருந்தேன், எங்கள் வீட்டில் குடியிருந்த ஒரு பையனோடு நான் பேசுவேன். அவனும் என்னுடன் நன்றாக பேசுவான். நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதை எனது பெற்றோர் கண்டித்தனர்.இதுபோன்று, ஆண்களோடு பேசக்கூடாது என கண்டித்தனர். ஆனால் அந்த பையனை சகோதரனாக நினைத்ததால், நான் அவனுடன் தொடர்ந்து பேசிகொண்டிருந்தேன்.

ஒருநாள் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்காக ஊருக்கு சென்றுவிட்டனர். நான் மட்டும் வீட்டில் இருந்ததால், கதவை திறந்துவைக்காதே என எச்சரித்துவிட்டு எனது பெற்றோர் சென்றனர்.ஆனால், நான் வழக்கம்போல கதவை நன்றாக திறந்துவைத்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென எனது வீட்டுக்கு வந்த பையன், என்னிடம் பேசிகொண்டே காபி குடிக்கலாமா எனக்கேட்டான்.

நானும் காபி போட்டுக்கொடுக்க சென்றபோது, திடீர் என்று கதவைப் பூட்டினான். எனக்கு அதிர்ச்சி. ஏன், கதவைப் பூட்டுகிறாய் என கேட்டேன். உன்மேல் உயிரையே வச்சிருக்கேன் என சொல்லி நெருங்கி வந்தான். அப்படி சொல்லாதே, நான் உன்னை சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன் என அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றேன், ஆனால் அவன் என்னை பலாத்காரம் செய்துவிட்டான்.

இதனை வீடியோ எடுத்து வைத்துள்ளேன், நடந்தவற்றை வெளியில் கூறினால் சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினான்.

பிறகு என் குடும்பம் வீட்டை விட்டு என்னை வெளிய விரட்டிவிட்டாங்க. என் சகோதரிகளையும் என் கூட தொடர்புவச்சுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, நான் அவங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டேன் என்பதற்காக.

இப்ப, இந்த பதினேழு வயசுல என்ஜிஓ நிறுவனத்துல வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்