தடுமாறாமல் சம்மதம் சொன்னாள்: காதலியை கரம்பிடிக்கிறார் இந்திய அணியின் இளம் வீரர்

கிங்ஸ் லெவன் பாஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மயான்க் தனது நீண்ட நாள் தோழி ஆசிதா சூட் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

தற்போது 27 வயதாகும் மயான்க் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருட துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருந்த மயான்க், தற்போது திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இந்த செய்தியை தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அழகான போட்டோவுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தான் எனது தோழியை திருமணம் செய்துகொள்ள சொல்லி காதலை தெரியப்படுத்தினேன். அதற்கு அவள் தடுமாறாமால் சம்மதம் சொன்னாள்.

இதனைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளோம், இதனால் எங்கள் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்