கனடாவில் சிக்கலில் சிக்கியுள்ள தமிழர்!

கனடாவில் அரசியல்வாதியும் பொலிஸ் அதிகாரியுமான ரொஷான் நல்லரட்னம் என்ற தமிழர் தொழில்முறை தர விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்டாறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஒன்டாறியோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

திங்களன்று காலை புதிய ஜனநாயகக் கட்சியால் வெளியிடப்பட்ட ரொஷான் நல்லரட்னத்தின் மின்னஞ்சலில், “எனக்கு எதிராக மோசமான பிரச்சாரம் செய்ய வேண்டாம், தேர்தலுக்குப் பிறகு நான் பாடம் கற்பிப்பேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலை பெற்றவர் நினைவிழந்த நிலையில் காணப்பட்ட போதிலும், இது 96 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பான்மையானது தமிழ் சமூகத்திற்கு சென்றுள்ளதாகவும், புதிய ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸ் பேச்சாளர் மார்க் புகாஷ் கருத்து வெளியிடுகையில், ரொஷான் நல்லரட்னம் அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பில் தொழில்முறைத் தரப்பினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நல்லரட்னம் தனது நடத்தை குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Doug Ford அழைப்பு விடுத்துள்ளார்.

தான் இதுவரை மின்னஞ்சலை பார்க்கவில்லை, ஆனால் தேர்தல் களம் சூடாக இருப்பதாகவும், அவர் நேர்மறைத்தன்மையுடன் இருப்பதாகவும், Doug Ford குறிப்பிட்டுள்ளார்.

Scarborough-Guildwood பகுதி வேட்பாளர் நல்லாரட்னம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக டொரண்டோ பொலிஸ் சேவையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

எனினும் இந்த குற்றசாட்டுகள் தொடர்பில் ரொஷான் நல்லரட்னம் எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை குறித்த கனேடிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்