மகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்

மகாவலி நீரை வட மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை, எனினும் அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதையே எதிர்ப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்தார்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்றமகாவலி எல் வலையம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் திடடமிட்ட சிங்களகுடியேற்றங்கள் தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டைகூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடமும் நேரடியாகத் தெரிவித்துள்ளதாகவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான வட மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு, தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் பல திட்டங்களை, நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கமும் முன்னெடுத்துள்ளதாக இந்த கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் வட மாகாணத்தில்திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம்வகிக்கும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விசேட செயலணி, இவற்றை தடுக்க துரதமாக செயற்பட வேண்டும்என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் யூன்நான்காம் திகதியான நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் நிலஆக்கிரமிப்புக்கள் குறித்தும், அவற்றைத்தடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ்மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி வடமாகாணசபையைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்ந்திருந்த நிலையிலேயேவடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி எல் வலயம் மற்றும்மகாவலி ஜே – கே வலயங்களால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகியவட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் சுமார் 15 வருடங்களில் வரவுள்ள பாதிப்புக்கள் குறித்து உரியஆதாரங்கள் மற்றும் படங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்படி அடுத்த 15 வருடங்களில் வடமாகாணத்தின் சனத்தொகை இயற்கைக்கு மாறாகசடுதியாக அதிகரிக்கும் எனவும் அந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாக திட்டமிட்டசிங்கள குடியேற்றங்கள் அமையும் எனவும் எதிர்வு கூறப்பட்டது. இதனால் வடமாகாணத்தில் தமிழ் மக்களின்இருப்பு பாரிய கேள்விக்குள்ளாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்படிதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தமாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்றஉறுப்பினர்களும், பல்வேறுயோசனைகளை முன்வைத்தனர்.

இந்த யோசனைகளின் அடிப்படையில் வடமாகாணத்தில்இடம்பெற்றுவரும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோரை கோருவதென தீர்மானம்எடுக்கப்பட்டது. அதேவேளை இந்த நடவடிக்கைகளை கையாள்வதற்காக விசேட செயலணியொன்றும்உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சப அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞர்னம் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குஉறுதிப்படுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்