விளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு (1008) சங்காபிஷேகம்

(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவ (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம்-2018.

சுவர்ணமணி இலங்கா புரியின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே சைவமும் தமிழம் தழைத்தோங்கும் கலை கலாசார பாரம்பரியத்திற்கு மையமாகவும் இலங்கையில் முதல் முறையாக 6அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் விக்கிரகம் அமையப்பெற்ற ஒரே ஆலயமாம் விளாவட்டவான் தண்ணில் இன்பமுற அமைந்து அருளாட்சி செய்து வரும் திருவருள் மிகு ஸ்ரீ வீரமா காளியம்பாளின் கும்பாபிஷேக தின இரண்டு வருட பூர்த்தி சகங்ர (1008) சங்காபிஷேகம் நடைபெறுவதற்கு இறையருளும் குருவருளும் கை கூடியுள்ளது.

16 / 06 / 2018 சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு.
விநாயகர் வழிபாடு புண்ணியாக வாசனம் அனுக்ஞை வாஸ்த்து சாந்தி, சங்குஸ்தானம் என்பன நடைபெறும்.

17 / 06 / 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில்.
விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், யாகமண்டப பூசை, சங்கு பூசை, விசேட திரவிய கோமம், திரவிய அபிஷேகம், சகஸ்ர சங்காபிஷேகம் மற்றும் விசேட பூசையும் நடைபெற்று மகேஸ்வர பூசை (அன்னதானம்) என்பன நடைபெறும்.

குறிப்பு:
இங்கு இடம் பெறவுள்ள 1008 சங்காபிஷேக வேளையில் 1008 மானிடர்களின் நாமங்களை அர்ச்சனை செய்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இங்கு இடம்பெறும் 1008 சங்காபிஷேக வேளையில் தாங்களும் இந்த 1008 நாமங்களில் ஒருவராக தங்களுடைய பெயரினை பதிவு செய்து அன்னை வீரம்மா காளியம்பாளின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றனர்.

சங்காபிஷேக பிரதமகுரு:
கிரியா கலா ஜோதி ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ இரா.கு.அருளானந்தம் குருக்கள்.
(விளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயம்,
ஈச்சந்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு)

ஆலய நித்திய போசகர்:
சிவஸ்ரீ அ.கு.தனராஜ சர்மா.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்