விஜய் தணிகாசலம் — வரலாறு படைக்கும் ரூச்பார்க் தமிழ் வாக்காளர்களின் ஒரே தெரிவு

வரும் யூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். புலம்பெயர் தமிழர் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் பாராளுமன்றத்திற்கு ஈழத்தமிழர் இருவரை தொடர்ச்சியாக தெரிவு செய்து அனுப்பிய பெருமை கனடாவுக்கு மட்டுமன்றி ரூச் பார்க் தொகுதியையே சாரும். கனடிய பாhராளுமன்றமே சென்றுவிட்ட ஈழத்தமிழினத்தால் தாம் அதிகம் வதியும் கனடாவின் பெரு மாகாணமான ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை வெற்றி பெற முடியாமலே போனது. இந்நிலையிலேயே வரும் யூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் ரூச் பார்க் தொகுதியில் வேட்பாளராக முற்போக்கு பழமைவாதக்கட்சியின் சார்பில் களம் காணுகிறார். இளையவர் விஜய் தணிகாசலம். காத்திரமான மாணவர் மற்றும் இளையோர் செயற்பாடுகளினூடாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர் சமூகத்திற்கு நன்கு அறிமுகமானவர் விஜய்.

இளைய சமுதாயம் சமூகப் பொறுப்புகளில் அனைத்து மட்டங்களிலும் முன்வர வேண்டும். ஈழத்தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கும் பொறுப்பேற்று ஒரு நிவாரணியாக தலைமைத்துவ நிலையை தாயகத்திலும் புலம் பெயர் சமூகத்திலும் இளைய சமூகம் வகிக்க வேண்டும் என்ற சமூகத்தின் பேரவாவை பூர்த்தி செய்யும் வகையில் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக 2007 ஏப்பிரல் முதல் களத்தில் உள்ளார் இளையவர் விஜய் தணிகாசலம்.

இந்நிலையிலேயே ரூச் பார்க் தொகுதியில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்காளர்காளர்;களுக்கு மேலும் ஒரு வரலாற்றுக் கடமை எழுகிறது. வரும் தேர்தலில் தவறாது ஒன்றுபட்ட சமூகமாக வாக்களித்து விஜய் தணிகாசலத்தின் பெரு வெற்றியை உறுதி செய்வது.

இத்தொகுதி தமிழ் மக்கள் வரலாறாக பலவற்றை இதுவரை சாதித்துள்ளார்கள். முதலில் 2011இலும் பின்னர் 2015 இலும் ஈழத்தமிழர் ஒருவரை புலம்பெயர் ஈழத்தமிழர் வரலாற்றாக தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியது. பின்னர் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரொரன்ரோ பாடசாலைச்சபைக்கு தமிழர் ஒருவரை தெரிவு செய்து அனுப்பினர்;. பின்னர் 2017 பெப்பிரவரியில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஒன்றில் வரலாற்றில் முதற்தடவையாக தமிழர் ஒருவரை ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினராக தெரிவு செய்து வரலாறு படைத்தனர். இவர்கள் வெற்றிகளின் பின் தமிழர்களின் ஒன்றுபட்ட வாக்களிப்பின் பலமே அவற்றை சாதித்தன.

இந்த வகையில் கனடாவின் பெரும் கட்சிகளான லிபரல் கட்சி சார்பில் ஒருவரை கனடிய பாராளுமன்றத்திற்கும் புதிய சனநாயக்கட்சி சார்பில் நன்கு அறிமுகமானவரை ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினராகவும் தெரிவு செய்து அழகு பார்த்தவர்கள் தற்போது முற்போக்கு பழமைவாதக்கட்சியின் சார்பில் விஜய் தணிகாசலத்தை தெரிவு செய்து ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் மேலும் பல வரலாறுகளைப்படைப்பர். முதல் ஈழத்தமிழரை ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த பெருமை. ஒரே நேரத்தில் மூன்று பிரதான கட்சிகளிலும் (லிபரல் புதிய சனநாயக்கட்சி முற்போக்கு பழமைவாதக்கட்சி) மூன்று அரச மட்டங்களிலும் (ரொரன்ரோ மாநகரசபை ஒன்ராரியோ பாராளுமன்றம் கனடிய பாராளுமன்றம்) ஈழத்தமிழர்களை உறுப்பினர்களாக்கிய வரலாற்றுப் பெருமை.

ஆகவே இதுவரை தமது வரலாற்றுக் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றி வரலாறு படைத்துவரும் ரூச் பார்க் தமிழ் வாக்காளர்காளர்கள் தற்போது போட்டி பழமைவாதக்கட்சிக்கும் புதிய சனநாயகக்கட்சிக்கும் இடையில் மட்டுமே என்றாகிவிட்ட நிலையில் வாக்கை ;சிதறடியாது வரும் யூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத் தேர்தலிலும் தவறாது பெரு எண்ணிக்கையில் ஒன்றுபட்ட சமூகமாக வாக்களித்து இளையவர் விஜய் தணிகாசலத்தின் வெற்றியை உறுதி செய்வர் என தமிழினம் ஆவல் கலந்த பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்