மீம்ஸ் மெல்ல எல்லை தாண்ட…

பிடியாத பிக்ஹுக்கு
வடிவேலு மீம்ஸ் போட்டு
பொடியன்மார் மகிழ்கிறார்
புனிதம் புரியாமல்.

எந்தக் கொள்கைக்கும்
ஏதிர்ப்புத் தெரிவிக்க
செந்திலின் படமிடுவோர்
சிந்திக்க வேண்டாமா

பிறை பார்த்தல் பிரச்சினைக்கு
பேஷ் புக்கில் நக்கலாய்
குறை கூறும் நோக்கில்
கூத்தாடி மீம்ஸ் போடல்
முறைதானா என்று
மூன்று முறை சிந்திப்பீர்.

மக்களை சிரிப்பூட்ட
மார்க்க விடயங்களில்
நக்கல் அடித்து
நகைச் சுவை செய்தல்
தக்க செயலா?
தரமான செயலா?

நபிகள் நாயகத்தின்
நல்ல போதனைகளை
நடிகன் ‘நாயகன்’
நமக்குச் சொல்வது போல்
இன்னுமொரு மதத்தினர்
இடுவதற்கு முனையலாம்
இந்த முன் மாதிரியால்.

அரசியல் ,விளையாட்டு
அது போன்ற விடயத்தில்
பொருத்தமாய் மீம்ஸ் இட்டு
புரிய வைத்தல் தவறில்லை
ஆனால் பிக்ஹில்
ஆலிம்கள் முரண்பட
தான் அதில் நுழைந்து
தரம் கெட்ட சினிமாவால்
வீணாய் மீம்ஸ் போடல்
வெறுக்கும் செயலே.

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்