27ல் இப்படியும் சிலர்

அள்ளாஹ்வை அழைப்பார்
அவுட் ஸ்பீக்கர் போட்டு.
எல்லா இடமும்
இஷ்டத்துக்குப் பார்க் செய்வார்.
பள்ளியில் படுத்து
பார்ப்பார் முக நூல்
பிள்ளைகளை அடக்க
பிரம்புடன் சில பேர்.

கிளிப்பிள்ளை போல
கேட்பார் தெளபா.
பழையபாவம் புதியபாவம்
பாடமாக்கி சொல்வார்.
வெளிப் பள்ளி விறாந்தையில்
வீண் கதை பேசுவார்.
அலுப்பு வரும் போது
அங்கேயே படுப்பார்.

இடை வேளை நேரம்
இரண்டு டீ குடிப்பார்.
உடையில் துண்டு கொட்ட
உண்பார் சமுசா.
இடைக்கிடை ட்ரஸ்டிக்கு
ஏசி இன்புறுவார்.
கடைசியில் சமுசா செய்த
கடைக்கும் குறை சொல்வார்.

சென்ற வருட பாவத்தை
சீக்கிரம் டிலீட் செய்து
அன்று பிறந்த பாலகனாய்
அகமகிழ்ந்து வெளி வருவார்.
பாலகன் தவறி
படிக்கட்டில் விழலாம்.
கால் வழுக்கிப் பாலகன்
கவ்ளுக்குள் விழலாம்.
ஆதலால் பாலகன்
அடுத்த வருடம் வரை
பள்ளிக்கு வர மாட்டார்
பாவம் பாலகன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்