மாத்திரைகள் பயன்படுத்தி உல்லாசம்! கொன்றது ஏன்? கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்

தமிழகத்தில் தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணை முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்றது ஏன் என கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சியின் துவரங்குறிச்சியை அடுத்த தச்சமலை அருகே கடந்த மாதம் 29ம் திகதி பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.ஆடைகள் கிழிந்து கிடந்த நிலையில், முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்.பி, மணப்பாறை பொலிஸ் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

முகம் முழுவதும் சிதைந்து போய் இருந்ததால் அடையாளம் தெரியாமல் பொலிசார் திணறிப்போயினர்.ஒருவார கால விசாரணைக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனம்பட்டியை சேர்ந்த மலர்க்கொடி என்பது தெரியவந்தது.

அடுத்த கட்ட விசாரணையில் சிவகங்கை அம்மாபட்டியை சேர்ந்த முருகன் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

முருகன் கூறியதாவது, நத்தத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மலர்க்கொடி வேலை செய்து வந்தார், அருகிலுள்ள கோழிப்பண்ணையில் நான் வேலை பார்த்து வந்தேன்.

என் மனைவி மலர்மணி மூலம் எனக்கு மலர்க்கொடி அறிமுகம் ஆனாள், நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

அவளை காரியாப்பட்டியில் குடிவைத்து கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தோம்.

எங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது, முதல் கணவர் இறந்துவிட்டதாக கூறினாள்.

நாட்கள் செல்ல செல்ல அவளது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

விசாரித்து பார்த்ததில் அவளுக்கு ராமர் என்பவருடன் திருமணம் ஆனது, இதில் ஒரு ஆண் குழந்தை உண்டு.

அடுத்து ராமரை பிரிந்து மணிகண்டன் என்பவரை திருமணம் செய்துள்ளார், இதில் இரண்டு பெண் குழந்தைகள்.

சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் இறந்து போக பெண் பிள்ளைகளை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு துபாய் சென்றுள்ளார்.

அங்கு பிடிக்காததால் மீண்டும் தமிழகம் வந்து வேலை பார்த்துள்ளார், இங்கே என்னை போன்று பல ஆண்களுடன் பழகி வந்தது தெரியவந்தது.

இதை தெரிந்து கொண்டு நான் சண்டையிட்டதும், நாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோ இருப்பதாக கூறி என் குடும்பத்தாருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார்.

அத்துடன் பணமும் கேட்டு தொந்தரவு செய்தார், எனவே அவளை தீர்த்துக்கட்ட நினைத்தேன்.
இதன்படி கடந்த 27ம் திகதி தச்சமலைக்கு சென்று நாங்கள், மாத்திரைகள் பயன்படுத்தி உல்லாசமாக இருந்தோம்.

அப்போதும் பணம் கேட்டதால் அவளை கொன்றுவிட்டு முகத்தை சிதைத்துவிட்டு வந்தேன்.

அவளை டிவியில் பார்த்து எனது மனைவி மற்றும் அவளது தோழிகள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அடுத்தடுத்த விசாரணையில் நான் மாட்டிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்