டொனால்ட் ட்ரம்பிற்கு கனடா வாழ் தமிழர்கள் கடும் கண்டனம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கனடா தமிழர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ட்ரூடோவை, “நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, டொனால்ட் ட்ரம்பிற்கு கனடா தமிழர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து கனடாவாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“வயதாயிற்றே தவிர்த்து பேச்சில் முதிர்ச்சி இல்லை. கோட்பாட்டில் வேறுபாடு இருக்கலாம். அதை பகிரங்கமாகவும் கூறலாம். ஆனால் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். உலகமே வேடிக்கை பார்க்கிறது.”

“இந்த மாதிரி நான் பேசினால் என் அம்மாவிடமிருந்து அடி கிடைத்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் கூறியுள்ளார். அப்படி தான் எனக்கும் தோன்றுகிறது.

“ட்ரம்ப் இந்த மாதிரி பேசி, பேசிதான் பிரபலம் ஆகியிருக்கின்றார். ஆனால் இது கொஞ்சம் அதிகமானது” என கனடா வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்