கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு இன்றைய தினம் (11) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை, மாநகர முதல்வர் தி.சரவணபவான், இந்து குருமார்கள், இஸ்லாமிய மௌலவிகள், சர்வமத அமைப்புகளின் பிரதிநிதிகள், எகெட் நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இன்றைய நோன்பு துறக்கும் நேரத்தின்படி நோன்பு பிரார்த்தனை இடம்பெற்று நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்