கனடாவில் ஏற்பட்ட விபரீதம்-காணாமற் போன தமிழ் இளைஞன்

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞனின் கடலில் மூழ்கி காணாமற் போயுள்ளார் என கனேடிய அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் கனேடிய நேரப்படி நேற்றிரவு 9.42 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா அடையாளம் காட்டியுள்ளார்.

கனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொரொண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
கடலோர பொலிஸார் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்ரமணியம் தனது 10 வயதில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். சுப்ரமணியத்துடன், அவரது சகோதரன் தீபன் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

சுப்ரமணியம் சிறப்பாக நீந்த கூடியவர் அல்ல எனினும் நண்பர்களுடன் வெளியே செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவசம் எதுவும் அவர் அணிந்திருந்தாரா என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியம் எனது மகன் போன்றவர் என அவர் கூறியுள்ளார். அவர் மிகவும் திறமையான ஒருவராகும். DJ இசை மூலம் தமிழ் சமூகத்தில் அவர் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும். அவர் ஒரு சிறந்த DJ இசை கலைஞராகும்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுப்ரமணியத்தின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து, சுப்ரமணிம் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கப்பலில் இருந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனை இலங்கையில் உள்ள சகோதரனுக்கு அறிவித்ததாக சுப்பையா தெரிவித்துள்ளார்.

அவர் என்னை மிகவும் நேசித்தார். என்னிடம் எந்த நேரமும் பேசி கொண்டே இருப்பார் என சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சுப்ரமணியம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்