விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு 24 மில்லியன் டொலர் ஆகும்.

கடந்த ஆண்டு 15 மில்லியன் டொலரில் இருந்து 22 மில்லியன் டொலராக இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் 87வது இடத்தை விராட் கோஹ்லி பிடித்தார்.

இந்தியாவில் பிரபல நிறுவனங்களின் விளம்பர தூதுவராக இருப்பதற்கு நடிகர் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக இவர் அதிக சம்பளம் வாங்குகிறார்.

2015 ஆம் ஆண்டில் இவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் 1 மில்லியன் டொலர் வாங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு இவர் வாங்கும் சம்பளம் 2.5 மில்லியன் டொலர் ஆகும்.

தற்போது இவர் 17 நிறுவனங்களின் விளம்பர தூதுவராக இருக்கிறார். sportswear brand Puma நிறுவனத்தின் விளம்பர தூதுவராக 8 வருடங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். 17 மில்லியன் டொலர் தொகை சம்பளமாக இவருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்