டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை முடிந்தது! எதிர்பார்ப்பில் உலக நாடுகள்

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

இவர்களின் சந்திப்புக்குப் பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபருடனான பேச்சுவார்த்தை மிக சிறப்பாக அமைந்ததாகவும், இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் நடுவில் இந்த இரு தலைவர்களும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மிக முக்கிய பிரச்னையான அணுஆயுத சோதனை, பொருளாதாரத் தடை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

சந்திப்பின் போது , அனைத்து தடைகளும் கலைந்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்று கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்