இரண்டு இளம்பெண்கள் செய்த செயல்-அதிர்ந்த பொலிசார்

இந்தியாவில் இரண்டு பெண்கள் தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறி காவல் நிலையத்துக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் சேர்ந்து வேலை செய்யும் நிலையில் அவர்களுக்குள் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள எண்ணி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

இதை கேட்ட குடும்பத்தார் அதிர்ந்த நிலையில் திருமணத்துக்கு மறுத்துள்ளனர்.

பின்னர் இரு பெண்களும் காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் தங்களுக்கு திருமணம் செய்துவைக்க கோரியுள்ளனர்.

இந்தியாவில் ஓரின சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்பதால் இரு பெண்களுக்கும் அது குறித்து பொலிசார் கவுன்சிலிங் கொடுத்தனர்.

இதன்பின்னர் இருவரும் அவரவர் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்