தலையில் பொடுகா? இது மட்டும் போதுமே

பொடுகு தொல்லை இருந்தாலே முடி கொட்டுதல், இளநரை, முகப்பரு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்ககூடும்.

இதற்காக பல்வேறு ஷாம்புகளை பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கக்கூடிய மருதாணியை கொண்டே இதற்கு தீர்வினை பெறலாம்.

அத்துடன் முடி கொட்டுவதும் நின்று, அழகான கூந்தலையும் பெற முடியும்.
ஹென்னாவுடன் லெமன் சாறு
4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர்
லெமன் சாறு
யோகர்ட்

ஹென்னா பவுடர், லெமன் சாறு மற்றும் யோகர்டை பேஸ்ட் போன்று கலந்து கொண்டு தலையிலிருந்து முடியின் நுனி வரை தடவவும்.

இதனை 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மைல்டு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளவும்.

முடி வறண்டு இருந்தால் கண்டிஷனர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஹென்னாவுடன் வெந்தயம்
4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர்
லெமன் சாறு
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், வொயிட் வினிகர், வெந்தயப் பொடி
2 டேபிள் ஸ்பூன் யோகர்ட்

இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொண்டு 12 மணி நேரம் ஊற வைக்கவும், பின்னர் காலையில் எழுந்ததும் இதை தடவி 2 அல்லது 3 மணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும்.
ஹென்னாவுடன் முட்டை
3 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர்
தண்ணீர் கலப்பதற்கு
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
2 டேபிள் ஸ்பூன் அடித்த முட்டையின் வெள்ளை கரு

இவை அனைத்தையும் கட்டியில்லாமல் கலந்து கொண்டு, தலையின் நுனி வரை தடவி ஷாம்பூ போட்டு அலசவும்.

இந்த மூன்றில் ஒன்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்