எங்களால் காவிரியை கொண்டு வர முடியாதுதான்: மஹிந்திர சிங் டோனி

2018 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை தாங்கள் சென்னையில் தான் கொண்டாட வேண்டும் என்று அனைவரும் சென்னையில் இந்த வெற்றி விழாவை கொண்டாடினர்.

அது சமயம் எப்போது பேசினாலும் அர்த்ததோடு பேசி அனைவர் உள்ளத்தையும் தொடும் டோனி இந்த முறையும் அதே போல பேசி அனைவர் மனதிலும் இடம்பெற்றார்.

வெற்றிவிழாவில் பேசிய டோனி, அடுத்த ஆண்டும் இதே கோப்பையை தக்க வைக்க சிஎஸ்கே அணி முயலும். விடயம் என்னவென்றால் எப்போதும் எங்களால் காவிரியை கொண்டுவர முடியாது ஆனால் கோப்பையை வென்று வர முடியும். வழியே இல்லாமல் நாங்கள் குறிவைக்கப்பட்டோம் இது நியாயமானதுதான் மற்றும் எப்போதும் நடக்க கூடியதுதான். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் எங்களால் வெல்ல முடிந்தது. எங்களால் இதைத்தான் செய்ய முடிந்தது. ஆகவே கோப்பையை இங்கு கொண்டு வந்து விட்டோம்.

அடுத்த வருடம் நடக்க போகும் ஐபிஎல் போட்டிகளில் எங்களுடன் மோதப்போகும் அணிகளுக்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்த அணி சிறந்த அணியோ அதுவே வெல்லும் என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்க கூடாது என்று மிக பெரிய போராட்டம் நடந்தது. அதனால் சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

காவிரி பிரச்னைக்காக போராடியவர்கள் அதே சமயத்தில் வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்காக போராடவில்லை. அது அவர்களின் வர்த்தகம் என்பதால் கூட இருக்கலாம்.

அது மட்டும் இன்றி இரண்டு வருடம் கழித்து விளையாட வந்த ஐபிஎல்லில் அனைவராலும் சீனியர் அணி என்று கேலி செய்யப்பட்ட அணியும் சி எஸ் கே தான்.

இருப்பினும் அத்தனை விமர்சனங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டு ஐபிஎல் விளையாட்டில் கடுமையாக போராடி சிஎஸ்கே வென்றதற்கு டோனியின் தலைமை பண்பும் அதனை பின்பற்றும் சகவீரர்களும் ஒரு காரணம் என்றுதான் கூற வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்