சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய தேரோட்ட நிகழ்வு

ஈழமணித் திருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேன்நகரில் சந்திவெளியூரில் எழுந்தருளியிருக்கும் புதுப்பிள்ளையார் ஆலயத்தின் திருவிழாவானது வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது.

இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான நேற்று (12.06.2018 ) தேரோட்ட நிகழ்வு இடம்பெற்றது.

வடம் பிடித்தால் நோய் நொடிகள் அகலும் என்பது ஐதீகம் . அந்த வகையில் ……

இத் தேரோட்டமானது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க மங்கள இசை மற்றும் வைலா இசை முழங்க விநாயகப்பெருமான் சித்திர தேரிலே ஆலய வீதியை வலம்வந்த வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 8 மணிக்கு ஆரம்பமான தேரோட்டமானது 11 மணியளவில் முடிவடைந்தது.

இந் நிகழ்வில் மட்டு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்