கிம் ஜாங் உன் ஒரு குழந்தை போன்றவர்: கண்ணீருடன் கூறிய பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை பற்றி பேசும் போது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் கண்கலங்கியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் கெய்த் ரோட்மேன்(57). கூடைப்பந்தில் அதிக நாட்டமுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், இவரது தீவிர ரசிகர் ஆவார்.

இதன் காரணமாக இருவரும் நண்பர்களானதைத் தொடர்ந்து, ரோட்மேன் பல முறை வடகொரியாவுக்கு சென்று கிம்மை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் கிம் ஜாங் உடனான நட்பின் அடிப்படையில், கெய்த் ரோட்மேனும் நேற்று சிங்கப்பூரில் தங்கியிருந்தார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் கிம் ஜாங் உன் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவுக்கு சென்று கிம்மை சந்தித்தேன். அதன் பின் நாடு திரும்பியபோது பலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

30 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தேன். ஜனாதிபதி கிம் ஒரு குழந்தை போன்றவர். அவரிடம் ஜனாதிபதி டிரம்ப் தனது மனிதாபிமானத்தை காட்ட வேண்டும். அமைதி திட்டத்தை இரு ஜனாதிபதிகளும் முன்னெடுத்துச் செல்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியபோது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தியது குறிப்பிடத்தக்கத்து.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்