செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று: நாசா தகவல்

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இப் புயல் வீசவுள்ளது.

அதாவது சுமார் 18 மில்லியன் சதுர கீலோ மீற்றர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.

இதேவேளை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்துவரும் ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்