காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வ.ராஜ்குமாா்

திருகோணமலையில் நடைபெற்ற காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளின் காணாமல் போனோரின் உறவுகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை புறக்கணித்து திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.

இன்று (13) காலை 9.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளான தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மற்றும் மிராட் ரகீம் ஜெயதீபா புண்ணியமூர்த்தி வேந்தன் கணபதிப்பிளளை ஆகியோர் இச் சந்திப்பிற்காக வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த அலுவலகத்தை நாம் புறக்கணிப்பதாகவும் பல ஆணைக்குழுக்களில் சாட்சியம் வழங்கியும் எமக்கு நீதி கிடைக்கவில்லை இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் அளிப்பதன் மூலம் எமது பிள்ளைகளின் மரணத்திற்காக நாம் நட்ட ஈடு கோரவில்லை எமது பிள்ளைகளே வேண்டும்.என தெரிவித்தனர்.ஜனாதிபதியால் காணாமல் போனோர் என்று இலங்கையில் எவறும் இல்லை என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன் பின் இந்த அலுவலகம் எதற்கு அவராவேயே நீதி வழங்க முடியவில்லை அவரால் நியமிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதியை பெற்றுத்தரப் போகிறார்கள் போன்ற கருத்துக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் பொது முன் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் வாயிலில் கூடியிரந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டு காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளான தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மிராட் ரகீம் ஜெயதீபா புண்ணிய மூர்த்தி வேந்தன் கணபதிப்பிளளை ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து இந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசினரகள்;.

இதன் போது கருத்து தெரிவித்த தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உங்களுடைய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். எமது ஆணைக்குழு தொடர்பாக உங்களுக்கு பல சந்தேகங்கள் எழுவது நியாயமானது இதற்கு நீங்கள் கடந்த வந்த வரலாறு காரணமாகிறது.எனவே இந்த சந்தேகங்களை கேட்டு அதற்கான தெளிவுகளை பெற்றுக் கொள்ளவே இன்றைய சந்திப்பை நாம் ஏற்பாடு செய்கின்றோம் உங்களுக்கு நாம் உதவுவதற்காக உங்களின் கருத்துக்கள் பல எமக்குத் தேவைப்படுகிறது.எனவே அந்த பெறுமதியான கருத்துக்களை தாங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறான பல ஆலாசனைகளை மன்னார் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் தங்களைப் போன்றோரிடம் பெற்று வந்துள்ளோம். 4வது சந்திப்பாக இன்று திருகோணமலைக்கு வருகை தந்துள்ளோம் என தெரிவித்தார்.ஆர்ப்பாட்டகாரர்கள் வாசலில் ஆர்ப்பாட்டத்தை தொடர மண்டபத்தில் உள்ளோருடனான சந்திப்பு தொடர்ந்து சென்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்